search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்திய நண்பர்"

    • வழி மறித்து பணம் கேட்டார்.
    • குடிபோதையில் தகராறில் ஈடுபட்டார்

    கோவை:

    கோவை புலியகுளம் அம்மன் குளம் 2-வது வீதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 21). இவர் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு அபிஷேக் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். பாப்பநாயக்க ன்பாளையம் காய்கடை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அவரது நண்பர் கோகுலகிருஷ்ணன் (23) என்பவர் மறித்து அபிஷேக்கிடம் செலவுக்கு பணம் கேட்டார்.

    அதற்கு அவர் தற்போது பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கோகுலகிருஷ்ணன் அபி ஷேக்கின் செல்போனை பிடுங்கி வைத்து கொ ண்டார். அவர் திருப்பி கேட்டபோது, கோகுல கிருஷ்ணன் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடபட்டார். இதில் அவர்களுக்கி டையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோகுலகிருஷ்ணன் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து அபிஷேக்கை தாக்கினார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி மிரட்டல் விடுத்து சென்றார்.

    இதில் அபிஷேக் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து அபிஷேக் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து கோகுலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

    கோவை மசக்காளி பாளையம் நீலியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அருண்குமார் (32). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அருண்குமார் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக நீலியம்மன் கோவில் வீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் குடிபோதையில் அருண்குமாரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த நபர் அருண்குமாரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அருண்குமாரை அங்கிருந்த வர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×